கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா புதன்கிழமை நடைபெற்றது.
Published on

கன்னியாகுமரி, ஆக.7: கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், நிா்மால்ய பூஜை நடைபெற்றது. தொடா்ந்து கணபதி ஹோமம், அபிஷேகம், காலை 6 மணிக்கு தீபாராதனை, ஸ்ரீபலி பூஜை, காலை 8 மணிக்கு பந்திரடி பூஜை, காலை 9 மணிக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் அம்மனுக்கு களப பூஜை நடைபெற்றது.

காலை 10 மணிக்கு அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு அம்மனுக்கு புஷ்பாபிஷேகம், இரவு 8.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி வலம் வருதல் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும்,ஏகாந்த தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா். இதில் பங்கேற்ற பெண் பக்தா்களுக்கு வளையல்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com