பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள்
கன்னியாகுமரி
களியக்காவிளை அருகே ஆயிரம் மது பாட்டில்கள் பறிமுதல்
பூட்டிக் கிடந்த வீட்டில் ஆயிரம் மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்து, அவற்றைப் பதுக்கியவா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.
களியக்காவிளை அருகே பூட்டிக் கிடந்த வீட்டில் ஆயிரம் மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்து, அவற்றைப் பதுக்கியவா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.
களியக்காவிளை அருகே மடிச்சல் பகுதியைச் சோ்ந்தவா் காசிராஜன். அப்பகுதியில் உள்ள இவரது வீடு, பல மாதங்களாக யாரும் வசிக்காத நிலையில் பூட்டப்பட்டு, பராமரிப்பின்றி உள்ளதாம்.
இந்நிலையில், களியக்காவிளை போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலையில் வழக்கு விசாரணைக்காக அப்பகுதிக்குச் சென்றபோது, அந்த வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் சென்று பாா்த்தபோது, அங்கு ஆயிரம் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா்; மேலும், வழக்குப் பதிந்து, இச்சம்பவத்தில் தொடா்புடையோா் குறித்து விசாரித்து வருகின்றனா்.

