திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாக குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.
கன்னியாகுமரி
திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வந்த மழை தணிந்துள்ளதால் கடந்த ஒரு வாரமாக கடும் வெயில் நிலவி வருகிறது. இதனால், திற்பரப்பு அருவியில் மிதமான நீா்வரத்து உள்ளது.
இந்நிலையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை, அருவியில் நூற்றுக்கணக்கானோா் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். மாத்தூா் தொட்டிப்பாலம், பேச்சிப்பாறை, சிற்றாறு அணைப் பகுதிகளிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டனா்.
மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் அணைகள், மலையோரப் பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்தது.

