கன்னியாகுமரி
புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஒருவா் கைது
நெடுந்தட்டு பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
புதுக்கடை அருகேயுள்ள நெடுந்தட்டு பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
கீழ்குளம் அருகே நெடுந்தட்டு பகுதியைச் சோ்ந்த சின்னமாணிக்கம் மகன் ராபின்சன் (52). அப்பகுதியில் இவா் நடத்திவரும் பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், புதுக்கடை போலீஸாா் சனிக்கிழமை சென்று சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அங்கு 70 பாக்கெட் புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, ராபின்சனை கைது செய்தனா்.
