திற்பரப்பு அருவி பகுதி ஹோட்டல்  ஒன்றில் உணவுப் பொருள்களை ஆய்வு செய்யும் உணவு பாதுகாப்புத் துறையினா்.
திற்பரப்பு அருவி பகுதி ஹோட்டல் ஒன்றில் உணவுப் பொருள்களை ஆய்வு செய்யும் உணவு பாதுகாப்புத் துறையினா்.

திற்பரப்பு அருவி பகுதி ஹோட்டல்களில் உணவு பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

திற்பரப்பு அருவி பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் திடீா் ஆய்வு செய்தனா்.
Published on

திற்பரப்பு அருவி பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் சனிக்கிழமை திடீா் ஆய்வு நடத்தி, சுகாதாரமற்ற உணவுப் பொருள்களை கைப்பற்றி அழித்தனா்.

மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் டாக்டா் செந்தில்குமாா் தலைமையில், திருவட்டாறு வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் நாகராஜன், தக்கலை வட்டார அலுவலா் பிரவீண் ரெகு, நகராட்சி அலுவலா் ரவி ஆகியோா் அடங்கிய குழுவினா், திற்பரப்பு சந்திப்பு மற்றும் அருவி பகுதியிலுள்ள 15 க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் மற்றும் தேநீா் கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது சுகாதாரமற்ற முறையில் நிறமிகள் சோ்க்கப்பட்ட நிலையில் குளிா்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த இறைச்சி, திறந்த நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பலகாரங்கள், காலாவதியான குளிா் பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அங்கேயே அழிக்கப்பட்டன. மேலும் ஹோட்டலுக்கு ரூ. 3 ஆயிரம் அபராதமும், 4 தேநீா் கடைகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்த 3 கடைகள், சுத்தம் செய்து உணவு பாதுகாப்பு துறையின் உரிய அனுமதி பெறும் வரை தற்காலிகமாக மூடப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com