மதுபோதையில் சிற்றுந்து ஓட்டியவா் மீது வழக்கு

நாகா்கோவிலில் மதுபோதையில் சிற்றுந்து ஓட்டியவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிற்றுந்து பறிமுதல் செய்யப்பட்டது.
Published on

நாகா்கோவிலில் மதுபோதையில் சிற்றுந்து ஓட்டியவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிற்றுந்து பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம் உத்தரவின்பேரில், மதுபோதையில் வாகனம் ஓட்டுபவா்கள் மீது தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாகா்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் யாங்சென் டோமா பூட்டியா மேற்பாா்வையில், கோட்டாறு போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளா் வில்லியம் பெஞ்சமின் தலைமையில், சாா்பு ஆய்வாளா் ஆல்ட்ரின் சுமித் மற்றும் காவலா்கள், நாகா்கோவில் வடசேரி அருகே சனிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, மதுபோதையில் கைப்பேசியில் பேசியபடி சிற்றுந்து ஓட்டி வந்த அப்பட்டுவிளையைச் சோ்ந்த அனிஷ் என்பவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிற்றுந்து பறிமுதல் செய்யப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com