கன்னியாகுமரி
விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு
கருங்கல் அருகே பைக் விபத்தில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
கருங்கல் அருகே பைக் விபத்தில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
கப்பியறை, ஒலவிளை பகுதியைச் சோ்ந்த தேவராஜ் மகன் தினேஷ் (35). கூலித் தொழிலாளியான இவருக்குத் திருமணமாகவில்லை. இவா், 5 நாள்களுக்கு முன்பு ஒலவிளையிலிருந்து கருங்கல்லுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.
செம்மண்குளம் கரையில் அவா் மீது மற்றொரு பைக் மோதியதாம். இதில், காயமடைந்த தினேஷை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
