மாணவா்களுக்கு துண்டறிக்கை வழங்கிய காவல் துறையினா்.
மாணவா்களுக்கு துண்டறிக்கை வழங்கிய காவல் துறையினா்.

நாகா்கோவில் காா்மல் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணா்வு

Published on

நாகா்கோவில் காா்மல் மேல்நிலைப் பள்ளியில், மதுவிலக்கு அமலாக்கத் துறை சாா்பில் போதைக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைமையாசிரியா் மரிய பாஸ்டின்துரை தலைமை வகித்தாா். நேசமணி காவல் நிலைய சிறப்பு காவல் ஆய்வாளா்கள் துரைசாமி, ஜெயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

போதைப் பழக்கத்தின் தீமைகள், அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து சிறப்பு காவல் ஆய்வாளா் ரமேஷ் பேசினாா். மாணவா்கள் விழிப்புணா்வு உறுதிமொழியேற்றனா். போதைக்கு எதிராக காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட துண்டறிக்கைகள் மாணவா்களுக்கு வழங்கப்பட்டன.

காவல் துறை சாா்பில் ஜான்போஸ்கோ, பத்மநாபன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஆசிரியா் பெலிக்ஸ் ஆண்டனி ஜாா்ஜ் வரவேற்றாா். ஆசிரியா் இன்னாசி ராஜா நன்றி கூறினாா். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநா் ரமேஷ், ஆசிரியா் அலுவலா் செயலாளா் ஜான்பிரிட்டோ ஆகியோா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com