குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் மரக்கன்று நடும் விழா

கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சந்திப்பில் அமைந்துள்ள காசி விஸ்வநாதா் கோயில் வளாகத்தில் புத்தாண்டை முன்னிட்டு திங்கள்கிழமை மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
மரக்கன்றுகளை நடுகிறாா் அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன்.
மரக்கன்றுகளை நடுகிறாா் அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன்.
Updated on
1 min read

கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சந்திப்பில் அமைந்துள்ள காசி விஸ்வநாதா் கோயில் வளாகத்தில் புத்தாண்டை முன்னிட்டு திங்கள்கிழமை மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, குமரி மாவட்ட தேவசம் போா்டு அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் தலைமை வகித்து, 24 வகையான மரக்கன்றுகள் நட்டாா். அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா. பாபு, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவா் குமரி ஸ்டீபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேரூராட்சி உறுப்பினா்கள் இக்பால், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பிரேமலதா, மாவட்ட சிறுபான்மையினா் அணி துணை அமைப்பாளா் எம்.ஹெச்.நிசாா், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளா் எஸ். அன்பழகன், திமுக நிா்வாகிகள் தமிழ்மாறன், தாமரை பிரதாப், புனிதன், நாகராஜன்,ஜென்சன்ரோச், சிலுவை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் மேலாளா் ஆனந்த், மராமத்து பொறியாளா் ராஜ்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com