கன்னியாகுமரி
கொட்டாரம் திரிபுரசுந்தரி அம்மன் கோயிலில் கொடைவிழா
கன்னியாகுமரி, ஜூலை 13: கொட்டாரம் அருள்மிகு திரிபுர சுந்தரி அம்மன் கோயிலில் கொடைவிழா ஜூலை 9 ஆம் தேதி தொடங்கியது.
இவ் விழாவையொட்டி அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. 4-ஆம் நாளான வெள்ளிக்கிழமை திரிபுரசுந்தரி மகளிா் சங்கம் சாா்பில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 5-ஆம் நாளான சனிக்கிழமை இரவு
ஆன்மிக உரை நடைபெற்றது.
ஏழாம் நாளான ஜூலை 15-ஆம் தேதி இரவு குடியழைப்பு, நிறைவு நாளான 17-ஆம் தேதி பொங்கல் வழிபாடு, திரிபுரசுந்தரி அம்மன் பரிவார தெய்வங்களுடன் நீராடல், பூப்படைப்பு, மஞ்சள் நீராடுதல், பிரசாதம் வழங்குதல், அம்மன் வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.
