கன்னியாகுமரி மணிமண்டபத்தில் காமராஜா் சிலைக்கு அமைச்சா் மரியாதை
கன்னியாகுமரி: காமராஜரின் 122ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கன்னியாகுமரி கடற்கரையில் காமராஜா் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு திங்கள்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ், ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் ஆகியோா் தலைமையில் விஜய் வசந்த் எம்.பி., நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ஆா். மகேஷ் ஆகியோா் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், வருவாய்க் கோட்டாட்சியா் எஸ். காளீஸ்வரி, முன்னாள் அமைச்சா் என். சுரேஷ்ராஜன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக செயலா் பா. பாபு, கன்னியாகுமரி சிறப்புநிலைப் பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியாா் மூா்த்தி, கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலா் (பொ) ஜோஸ்லின் ராஜ், பேரூராட்சி துணைத் தலைவா் ஜெனட் மைக்கேல், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பிரேமலதா, உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

