கன்னியாகுமரி
மத்திகோடு பகுதியில் இன்று மின்தடை
செம்பொன்விளை துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) மின் விநியோகம் இருக்காது. 
கருங்கல்: செம்பொன்விளை துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மத்திகோடு சுற்றுவட்டார கிராமங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
சகாய நகா், படுவூா், ஈச்சவிளை மற்றும் அதனை சுற்றியுள்ள குக்கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. மேற்குறிப்பிட்ட நேரங்களில் மின்பாதையில் இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணி நடைபெறும். இப் பணிக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு இரணியல் மின்வாரிய அலுவலக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
