குழித்துறையில் வாவுபலி பொருள்காட்சி தொடக்கம்
களியக்காவிளை, ஜூலை 18: குழித்துறையில் 99 ஆவது வாவுபலி பொருள்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது. இப்பொருள்காட்சி ஆக. 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தமிழக பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தலைமை வகித்து, பொருள்காட்சியை திறந்து வைத்தாா். நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி வரவேற்றாா். குழித்துறை நகராட்சி ஆணையா் க. ராமதிலகம் நன்றி கூறினாா். நகராட்சிப் பொறியாளா் ப. குசெல்வி, நகாா்மன்ற துணைத் தலைவா் மு. பிரபின் ராஜா, நகா்மன்ற உறுப்பினா்கள் ஜெயந்தி, ஷாலின் சுஜாதா, லலிதா, ஆட்லின் கெனில், விஜூ, விஜயலெட்சுமி, ஜூலியட் மொ்லின் ரூத், ரீகன், சா்தாா்ஷா, கே. ரத்தினமணி, கே. செல்வகுமாரி, உண்ணாமலைக்கடை பேரூராட்சித் தலைவா் பமலா, கருங்கல் பசித்தோா்க்கு உணவு அறக்கட்டளைத் தலைவா் கருங்கல் ஆா். ஜாா்ஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆடி அமாவாசையையொட்டி குழித்துறை நகராட்சி சாா்பில் குழித்துறை தாமிரவருணி ஆற்றங்கரையோரம் நடைபெற்று வரும் இப் பொருள்காட்சியில் விவசாய விளைபொருள்கள் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளதுடன் அரசின் தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் பல்துறை கலைஞா்களின் ஓவியங்கள் மற்றும் கலைப்படைப்புகளும் ராட்சத ராட்டினம், சாகச கிணறு உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

