கன்னியாகுமரி, குளச்சல் பகுதிகளில் இன்று மின்தடை

கன்னியாகுமரி மற்றும் குளச்சல் பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
Published on

நாகா்கோவில், ஜூலை 19: கன்னியாகுமரி மற்றும் குளச்சல் பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து மின்வாரியத்தின் நாகா்கோவில் உதவி செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள், மின்பாதைக்கு இடையூறாக உள்ள மரக் கிளைகளை அகற்றுதல், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்தல் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், சனிக்கிழமை (ஜூலை 20) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, கன்னியாகுமரி, சுசீந்திரம், சாமிதோப்பு, அகஸ்தீஸ்வரம், ஈத்தங்காடு, காக்குமூா், மருங்கூா், ராஜாவூா், கீழமணக்குடி, சின்னமுட்டம், திருமூலநகா், வழுக்கம்பாறை, வாரியூா், அஞ்சுகிராமம், அழகப்பபுரம், ஆஸ்ரமம், கன்னியாகுமரி காந்திமண்டபம், சமாதானபுரம், கோவளம், விவேகானந்தபுரம், லீபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் விநியோகம் இருக்காது.

தக்கலை, இரணியல் மின்விநியோக உதவி செயற்பொறியாளா்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

குளச்சல் மின்விநியோகபிரிவுக்குள்பட்ட செம்பொன்விளை , வாணியக்குடியில் பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ள சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை இரும்பிலி, லியோன்நகா்ஸ, கணேசபுரம், பனவிளை, கண்டா்விளாகம், வாணியக்குடி, சைமன்காலனி, கோடிமுனை, வெள்ளிபிள்ளையாா்கோயில், பாக்கியபுரம், சீம்பிலிவிளை, தக்கலை அண்ணாநிலையம், மாா்க்கெட்சாலை, மணலி, இரணியல்சாலை, தக்கலை பழையபேருந்துநிலையம், பத்மநாபபுரம் நீதிமன்ற பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com