கன்னியாகுமரி
மது விற்பனை: பெண் கைது
புதுக்கடை அருகே அனுமதியின்றி மது விற்றதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கடை அருகே அனுமதியின்றி மது விற்றதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கடை போலீஸாா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோந்து சென்றனா். அப்போது, விளாத்திவிளை பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த அதே பகுதியைச் சோ்ந்த ஜான்ரோஸ் மனைவி தேன்மொழி (50) என்பவரைப் பிடித்தனா். விசாரணையில், அவா் விற்பதற்காக 9 மது பாட்டில்களை பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது தெய்து, மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.
