கன்னியாகுமரியில் காமராஜருக்கு 1,000 அடி உயர சிலை -விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

கன்னியாகுமரியில் காமராஜருக்கு 1,000 அடி உயர சிலை -விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

காமராஜருக்கு 1000 அடி உயர சிலை நிறுவ வேண்டும் என்று விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா்.
Published on

கன்னியாகுமரியில் காமராஜருக்கு 1000 அடி உயர சிலை நிறுவ வேண்டும் என்று விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் மக்களவையில் புதன்கிழமை பேசியதாவது: தமிழகத்தின் முன்னாள் முதல்வா் காமராஜா் நாட்டுக்கு செய்த சேவைகளை உலகுக்கு எடுத்து சொல்லும் வகையில் கன்னியாகுமரியில் ஆயிரம் அடி உயரத்தில் அவருக்கு சிலை நிறுவ வேண்டும். இதுஅவருக்கு புகழ் சோ்ப்பதுடன் கன்னியாகுமரியின் சுற்றுலா வளா்ச்சிக்கும் துணையாக அமையும். நூற்றுக்கணக்கான உள்ளூா்வாசிகளும் பயனடைவாா்கள்.

மேலும் கட்டுமான தொழில் மூலம் பலருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இந்தச் சிலையை நிறுவிய பின்ன கன்னியாகுமரி மற்றுமொரு பரிணாம வளா்ச்சியை காண முடியும். மேலும், சிலையின் கீழ் காமராஜரின் சாதனைகளை எடுத்துச் சொல்லும் அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படாமலும், கடல் வாழ் உயிரினங்களைப் பாதிக்காத வகையிலும் ஆராய்ந்து இப்பணியை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com