மாா்த்தாண்டம் அருகே 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசியை வழங்கல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
Published on

மாா்த்தாண்டம் அருகே காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசியை வழங்கல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் அனிதகுமாரி தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை இரவு மாா்த்தாண்டம் அருகே இரவிபுதூா்கடை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்துக்கிடமாக வந்த சொகுசு காரை நிறுத்த சைகை காட்டினா். நிற்காமல் சென்ற காரை, அதிகாரிகள் துரத்திச் சென்று எட்டணி பகுதியில் மடக்கிப் பிடித்தனா். அதன் ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா்.

காரில் 1,500 கிலோ ரேஷன் அரிசி இருந்ததும், அதை கேரளத்துக்கு கடத்தி முயன்றதும் தெரியவந்தது. காருடன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அரிசியை காப்புக்காடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கியிலும், காரை விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்திலும் ஒப்படைத்தனா். இச்சம்பவத்தில் ஈடுபட்டோா் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

X
Dinamani
www.dinamani.com