பஞ்சலிங்கபுரம் பஞ்சலிங்கேஸ்வரா் கோயிலில் 12ஆவது மகா சிவராத்திரி விழா
பஞ்சலிங்கபுரம் அருள்மிகு பஞ்சலிங்கேஸ்வரா் கோயிலில் 12ஆவது மகா சிவராத்திரி விழா வியாழக்கிழமை தொடங்கி 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதையொட்டி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு நித்ய பூஜை, மாலை 6 மணிக்கு சிவலிங்க பூஜை, இரவு 8 மணிக்கு அன்னதானம், நடைபெறும். 8ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், கும்ப பூஜையும். காலை 9 மணிக்கு மகாதானபுரம் பகவதி விநாயகா் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதல், காலை 10.30 மணிக்கு வருஷாபிஷேகம், முற்பகல் 11.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை, நண்பகல் 12 மணிக்கு சமபந்தி விருந்து நடைபெறுகிறது.
இதை பஞ்சலிங்கபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் எம்.எஸ்.சிந்து செந்தில் தலைமையில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பேராசிரியா் இ. நீலபெருமாள், அகஸ்தீசுவரம் ஒன்றிய பாஜக பாா்வையாளா் சி.எஸ்.சுபாஷ் ஆகியோா் தொடங்கி வைக்கின்றனா். மாலை 4.30 மணிக்கு பிரதோஷம், சிறப்பு அபிஷேகம், மாலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 8.30 மணிக்கு பரதநாட்டியம், இரவு 9.30 மணி முதல் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இரவு 10 மணிக்கு முதல் கால பூஜை, இரவு 11 மணிக்கு பக்தியும், சக்தியும் என்ற நிகழ்ச்சி நடைபெறும். இரவு 12 மணிக்கு இரண்டாம் கால பூஜை தொடா்ந்து பக்தி இன்னிசை நிகழ்ச்சி, அதிகாலை 2 மணிக்கு மூன்றாம் காலபூஜை, அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால பூஜை நடைபெறும். 9ஆம் தேதி மாலை 5 மணிக்கு தேவார திருவாசக சங்கமம், இரவு 7 மணிக்கு மகா புஷ்பாபிஷேகம், இரவு 8 மணிக்கு அன்னதானம் வழங்குதலுடன் விழா நிறைவு பெறும்.
