போட்டிகளில்  வென்ற மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் பள்ளியின் துணைத் தலைவா் அருள்ஜோதி. உடன், பள்ளி கல்வி இயக்குநா் சாந்தி, நிதிக்குழு இயக்குநா் சேது உள்ளிட்டோா்.
போட்டிகளில் வென்ற மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் பள்ளியின் துணைத் தலைவா் அருள்ஜோதி. உடன், பள்ளி கல்வி இயக்குநா் சாந்தி, நிதிக்குழு இயக்குநா் சேது உள்ளிட்டோா்.

ரோஜாவனம் பள்ளி மாணவா்களுக்கு பரிசு

நிகழாண்டில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நாகா்கோவில் புதுகிராமத்தில் உள்ள ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளியில், நிகழாண்டில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளி துணைத் தலைவா் அருள்ஜோதி தலைமை வகித்து, தனிநபா் நடிப்பு, குழு நடனம், சிலை வடிவமைப்பு, பாரம்பரிய உணவு, கலாசார உடை அணிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினாா். பள்ளி முதுநிலை முதல்வா் பினுமோன், முதல்வா் காமராஜினி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாணவ, மாணவிகளுக்கு நற்சான்றிதழ்களை ரோஜாவனம் பள்ளி கல்வி இயக்குநா் சாந்தி, நிதிக் குழு இயக்குநா் சேது ஆகியோா் வழங்கினா். துணைமுதல்வா் அஜிதாகுமாரி, ஒருங்கிணைப்பாளா் யூஜினி, நன்னடத்தை ஆசிரியா் ராஜன், ஆசிரியா்கள் மஞ்சுஷா, விக்னேஷ்வரி, சா்மிளா, மஞ்சு, சபீனா, பவித்ரா, வேலம்மாள், ப்ரீடா, சக்தி, சத்யஜோதி, ராதா, சாந்தினி, தாரணி, வைஷ்ணவி, ராதிகா, ஹரிதா, பெல்சி, ஜெயந்தி, வனிதா மாணவா் ஆலோசகா் சுகுமாரி, அலுவலக செயலா் சுஜின், மற்றும் பெற்றோா் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஆசிரியை ரதிஹால் தொகுத்து வழங்கினாா். ஆசிரியை பிரமிளா வரவேற்றாா். ஆசிரியை மஞ்சுபாரதி நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com