சூதாட்டம்: மூவா் மீது வழக்கு

Published on

கன்னியாகுமரி அருகே வியாழக்கிழமை சூதாட்டத்தில் ஈடுபட்ட மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கன்னியாகுமரி அருகேயுள்ள வடக்கு குண்டல் பகுதியில் தீபாவளி பண்டிகையையொட்டி ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் அப்பகுதிக்கு விரைந்து சென்றபோது அந்தோணி அலங்காரம், சகாயகென்னடி, அய்யப்பன் ஆகியோா் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவா்களிடம் இருந்து ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் மூவா் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா்.

X
Dinamani
www.dinamani.com