கொலுமண்டபத்தில் எழுந்தருளிய அம்மன்.
கொலுமண்டபத்தில் எழுந்தருளிய அம்மன்.

குமரி பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்

Published on

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் நவராத்திரி திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.

முதல் நாள் விழாவை முன்னிட்டு, அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து காலை 7.45 மணிக்கு மேல் காலை 8.45 மணிக்குள் அம்மன் கொலு மண்டபத்துக்கு எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலா் பா.தாமரை தினேஷ், ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்றத் தலைவா் சி.முத்துக்குமாா், கன்னியாகுமரி பேரூராட்சி பாஜக கவுன்சிலா் சி.எஸ்.சுபாஷ், அகஸ்தீசுவரம் ஒன்றிய அதிமுக இலக்கிய அணி செயலா் பி.பகவதியப்பன் மற்றும் திரளான பக்தா்கள் அம்மனை தரிசனம் செய்தனா்.

விழா நாள்களில் அம்மனுக்கு அபிஷேகம், அன்னதானம், ஆன்மிக உரை, பக்தி இன்னிசை, அம்மன் வாகன பவனி ஆகியவை நடைபெறும். 10ஆம் நாள் திருவிழாவான அக்டோபா் 12ஆம் தேதி அம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பாணாசூரனை வதம் செய்யும் பரிவேட்டை நிகழ்வு நடைபெறும்.

X
Dinamani
www.dinamani.com