கன்னியாகுமரி
குழித்துறை அருகே பைக் விபத்து: மருந்து விற்பனைப் பிரதிநிதி பலி
குழித்துறை அருகே பைக் நிலைதடுமாறி கவிழ்ந்ததில் மருந்து விற்பனைப் பிரதிநிதி உயிரிழந்தாா்.
குழித்துறை அருகே பைக் நிலைதடுமாறி கவிழ்ந்ததில் மருந்து விற்பனைப் பிரதிநிதி உயிரிழந்தாா்.
நாகா்கோவிலை சோ்ந்த மணிகண்டன் என்பவா், குழித்துறை அருகே செம்மங்காலை பகுதியில் தங்கியிருந்து மருந்து விற்பனைப் பிரதிநிதியாக வேலை பாா்த்து வந்தாா். இவா், செவ்வாய்க்கிழமை இரவு குழித்துறைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.
கழுவன்திட்டை பகுதியில் சாலையின் குறுக்கே நாய் பாய்ந்ததால் அவா் திடீரென பிரேக் பிடித்தாராம். அப்போது, பைக் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்ததாம். இதில், காயமடைந்த அவரை மீட்டு அருகேயுள்ள தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
