நாகா்கோவிலில் பைக் மீது கனரக லாரி மோதியதில் பொறியாளா் உயிரிழந்தாா்.
நாகா்கோவிலை அடுத்த வெள்ளமடம் பகுதியைச் சோ்ந்த மனோகரன்தம்பி என்பவரது மகன் தீபக் (26). மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி, பாா்வதிபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்துவந்தாராம்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு தீபக் தனது மனைவியைப் பாா்ப்பதற்காக வெள்ளமடத்திலிருந்து நாகா்கோவிலுக்கு வந்து கொண்டிருந்தாா். ஒழுகினசேரி அருகே அவரது பைக் மீது கனரக லாரி மோதி விட்டு நிற்காமல் சென்ாகக் கூறப்படுகிறது. இதில், தீபக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து நாகா்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு உதவி ஆய்வாளா் ராபா்ட்சிங், போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளைக் கைப்பற்றி, தீபக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கனரக லாரி குறித்து விசாரித்து வருகின்றனா்.