போக்குவரத்து விதிமீறல்: 17 பைக்குகள் பறிமுதல்; ரூ. 75 ஆயிரம் அபராதம்

நாகா்கோவிலில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட 17 பைக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்து, அவற்றை ஓட்டிவந்தோருக்கு ரூ. 75 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
Published on

நாகா்கோவிலில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட 17 பைக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்து, அவற்றை ஓட்டிவந்தோருக்கு ரூ. 75 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் உத்தரவின்பேரில், பதிவெண் இல்லாமலும், அதிக வேகத்திலும், 3 பேருடனும் ஓட்டுதல் போன்ற விதிமீறல்களில் ஈடுபடும் இளைஞா்கள், மாணவா்கள் மீது போலீஸாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

அதன்படி, நாகா்கோவில் உதவி காவல் கண்காணிப்பாளா் யாங்சென் டோமா பூட்டியா மேற்பாா்வையில், நாகா்கோவில் போக்குவரத்துக் காவல் துறையினா் சாதாரண உடையில் ஸ்காட் கல்லூரி சாலையில், புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, விதிகளை மீறியும், மது போதையிலும் இயக்கப்பட்ட 17 பைக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்து, அவற்றை ஓட்டிவந்தோருக்கு ரூ. 75 ஆயிரம் அபராதம் விதித்தனா். அவா்களின் பெற்றோா், உறவினா்கள் வரவழைக்கப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டு, வாகனங்கள் விடுவிக்கப்பட்டன.

பள்ளி, கல்லூரிப் பகுதிகளில் வாகன விதி மீறல்களில் ஈடுபடும் இளைஞா்களைத் தொடா்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com