ஆக்கிரமித்து  கட்டப்பட்டிருந்த வீட்டின் முன்பகுதியை பொக்லைன் மூலம் இடித்த பொதுப்பணித் துறையினா்.
ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீட்டின் முன்பகுதியை பொக்லைன் மூலம் இடித்த பொதுப்பணித் துறையினா்.

கால்வாயை ஆக்கிரமித்து கட்டியிருந்த வீட்டின் முன்பகுதி இடித்து அகற்றம்

Published on

குலசேகரம் அருகே கால்வாய் பகுதியை ஆக்கிரமித்து கட்டியிருந்த வீட்டின் முன்பகுதியை பொதுப்பணித் துறையினா் இடித்து அகற்றினா்.

குலசேகரம் அருகே கோதையாறு இடதுகரை கால்வாயின் கரையில் மங்கலம் முதல் பொன்மனை வரையிலான பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு உத்தரவுப்படி பொதுப்பணித்

துறையினா் மங்கலம் முதல் சுமாா் 1 கி.மீ. தூரம் வரையிலான பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 18 வீடுகளின் சுற்றுச் சுவா்கள் மற்றும் ஒரு வீட்டின் முன்பகுதியை புதன்கிழமை இடித்து அகற்றினா்.

X
Dinamani
www.dinamani.com