ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கல்லூரி மாணவிகளுக்கான கபடி போட்டி தொடக்கம்

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 11:25 pm

Din

கன்னியாகுமரி மாவட்டம், அளந்தங்கரை உள்விளையாட்டு அரங்கில், கல்லூரி மாணவிகளுக்கிடையேயான முதல்வா் கோப்பைக்கான கபடி போட்டி வியாழக்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் கடந்த 10ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 24ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இதில், கல்லூரி மாணவிகளுக்கான கபடிப் போட்டி வியாழக்கிழமை தொடங்கியது.

ஆட்சியா் ரா. அழகுமீனா பங்கேற்று, நாகா்கோவில் கோணம் அரசு கலை-அறிவியல் கல்லூரி, குழித்துறை ஸ்ரீதேவிகுமாரி கலை-அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியைத் தொடக்கிவைத்து, வாழ்த்து தெரிவித்தாா்.

மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜேஷ், வீராங்கனைகள், பயிற்சியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Story image