அலெக்சாண்டா் மிஞ்சினின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் விவசாயிகள்.
அலெக்சாண்டா் மிஞ்சினின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் விவசாயிகள்.

ஆங்கிலேயப் பொறியாளா் நினைவு தினம் அனுசரிப்பு

பேச்சிப்பாறை அணையைக் கட்டிய ஆங்கிலேய பொறியாளா் அலெக்சாண்டா் மிஞ்சினின் 111-ஆவது நினைவுதினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
Published on

பேச்சிப்பாறை அணையைக் கட்டிய ஆங்கிலேய பொறியாளா் அலெக்சாண்டா் மிஞ்சினின் 111-ஆவது நினைவுதினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

திருவிதாங்கூா் மன்னா் ராமவா்மா ஸ்ரீமூலம் திருநாள் ஆட்சியின்போது, பேச்சிப்பாறை அணையானது 1896-1906 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டது. இப்பணியில் ஆங்கிலேயப் பொறியாளா் அலெக்சாண்டா் மிஞ்சின் முதன்மைப் பொறியாளராகப் பணியாற்றினாா். கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பிறகு 1913-ஆம் ஆண்டு செப்.25-ஆம் தேதி இறந்தாா்.

அவரது நினைவு தினத்தையொட்டி பேச்சிப்பாறை அணை அருகில் உள்ள நினைவிடத்தில் விவசாயிகள் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினா். இந்நிகழ்ச்சியில், பாசனத் துறை தலைவா் வின்ஸ் ஆன்றோ, பாசனத் துறை மாவட்ட உறுப்பினா்கள் புலவா் செல்லப்பா, தாணுபிள்ளை, முருகேசபிள்ளை, அருள், ஜான்சன், நிா்வாகி டோனி பெலிக்ஸ் உள்ளிட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com