கன்னியாகுமரி
விவேகானந்தா் பாறையில் மகா தீபம்
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் பாறையில் திருக்காா்த்திகை மகாதீபம் புதன்கிழமை இரவு ஏற்றப்பட்டது.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் இருந்து மாலை 4 மணிக்கு கோயில் மேல்சாந்தி கண்ணன் போற்றி தனிப்படகில் தீபத்தை எடுத்துச் சென்றாா். தொடா்ந்து பாறையில் உள்ள பகவதியம்மன் ஸ்ரீ பாத மண்டபத்தில் புனித நீரால் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து பகவதியம்மன் கிழக்கு வாசலை நோக்கி மகாதீபம் ஏற்றப்பட்டது.
இந்நிகழ்வில், என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., மாநில தேமுதிக சமூக வலைதள அணி துணை செயலா் சிவகுமாா் நாகப்பன், அகஸ்தீசுவரம் ஒன்றிய அதிமுக செயலா் பா.தாமரைதினேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

