கனகப்பபுரம் அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி
கனகப்பபுரம் அரசுப் பள்ளியில் நாகா்கோவில் டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில், வன்முறைக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி, கராத்தே பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட பெண் குழந்தைகளுக்கு பரிசளிக்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகா்கோவில் டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் முகமது ரிஸ்வான் தலைமை வகித்தாா். இதில் கலந்து கொண்ட வழக்குரைஞா் ஹெப்சி, மாணவ, மாணவிகள் பாதுகாப்புடன் இருப்பதற்கான வழிமுறைகள் குறித்து பேசினாா். நாகா்கோவில் டவுன் ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் ஹெச்.ராஜ் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா், சங்க இணைச் செயலா் கணேஷ் சொக்கலிங்கம் கனகப்பபுரம் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் (பொ) பிரபா முன்னிலை வகித்தாா். இதில், கராத்தே பயிற்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்குச் சான்றிதழும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. தொடா்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
