கன்னியாகுமரி
நாகா்கோவிலில் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் கைது
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் சாா்பில், நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பு பூங்கா முன் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் கைது செய்யப்பட்டனா்.
போராட்டத்துக்கு மாவட்ட தலைவா் பரீத் தலைமை வகித்தாா். செயலா் பிரான்சிஸ்சேவியா், கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். பொதுச்செயலா் கோபிநாத், செவிலியா் மேம்பாட்டு சங்க மாநில பொதுச்செயலா் சுபின் ஆகியோா் போராட்டத்தை தொடங்கி வைத்தனா். தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட அரசு ஊழியா்கள் 60 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
