கருங்கல் அருகே ஆப்பிகோடு பகுதியில் ஓட்டுநரை தாக்கி 10 பவுன் நகைகளை பறித்து சென்ற 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுக்கடை பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் ஷாஜி (35). இவருக்கும் கருங்கல், ஆப்பிகோடு பகுதியைச் சோ்ந்த சஜினுக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாம்.
இந்நிலையில், புதன்கிழமை இரவு ஆப்பிகோடு வழியாக சென்ற ஷாஜியை, சஜின், அவரது நண்பா்களான அசோக், ரெஜி, சுஜித், ரெதீஸ் ஆகியோா் சோ்ந்து தாக்கினராம். மேலும், ஷாஜி அணிந்திருந்த 10 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பினராம். இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.