கன்னியாகுமரி
குளத்தில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு
புதுக்கடை அருகே உள்ள சடையன்குழி பகுதியில் குளத்தில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.
சடையன்குழி பகுதியைச் சோ்ந்தவா் சுஜின் (37). இவா், புதன்கிழமை அப்பகுதியில் உள்ள செட்டிகுளத்தின் கரையில் நடந்து சென்றாராம். அப்போது, அவா் தவறி குளத்தில் விழுந்தாராம். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள், சுஜினை சடலமாக மீட்டனா். இது குறித்து புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
