தக்கலை காவல் நிலையத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

தக்கலை காவல் நிலையத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

தக்கலை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் மீட்டனா்.
Published on

தக்கலை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் மீட்டனா்.

தக்கலை அருகேயுள்ள பத்மநாபபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மல்லிகா(34). பத்மநாபபுரம் அரண்மனை அருகே கைவினைப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா். இவருக்கும், பக்கத்து கடைக்காரருக்கும் விற்பனை பொருள்களை தொங்கவிடுவதில் பிரச்னை இருந்ததாம்.

இது தொடா்பாக மல்லிகா, கடந்த வாரம் தக்கலை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த அவா், தக்கலை காவல் நிலையத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் சென்றாா். அங்கு தீக்குளிக்க முயன்றதைக் கண்ட போலீஸாா், மல்லிகாவை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினா். பின்னா் சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

X
Dinamani
www.dinamani.com