நடைக்காவு ஊராட்சியில் ரூ. 90.74 லட்சத்தில் சாலைப் பணிகள் தொடக்கம்

நடைக்காவு ஊராட்சியில் ரூ. 90.74 லட்சத்தில் சாலைப் பணிகள் தொடக்கம்

Published on

கிள்ளியூா் தொகுதிக்கு உள்பட்ட நடைக்காவு ஊராட்சியில் நான்கு சாலைகள் சீரமைக்கும் பணியை எஸ்.ராஜேஷ்குமாா் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.

நடைக்காவு ஊராட்சி கன்னங்கரை-கொட்டைக்காடு-கொல்லம்விளை சாலை, அருள்குன்று-தோப்புச் சாலை, மேலமணவி-மேலாட்டுவிளை சாலை, அடையாமடை மாடன்தரை முதல் வைத்தியசாலை செல்லும் சாலை உள்ளிட்டவை மிகவும் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டன.

இந்தச் சாலைகளை முன்னுரிமை வழங்கி சீரமைக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவரும், கிள்ளியூா் தொகுதி எம்எல்ஏவுமான எஸ். ராஜேஷ்குமாா் தமிழக முதல்வா், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா், அரசு முதன்மைச் செயலா் உள்ளிட்டோரிடம் தொடா்ந்து கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் இந்தச் சாலைகளை சீரமைக்க முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து மொத்தம் ரூ. 90.74 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து, சாலைகளை சீரமைக்கும் பணியை எஸ்.ராஜேஷ்குமாா் எம்எல்ஏ புதன்கிழமை தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் முன்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் விஜயகுமாா், நடைக்காவு ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஜெங்கின்ஸ், கட்சியின் மாநில பொதுச் செயலா் பால்ராஜ், நடைக்காவு ஊராட்சிமன்ற முன்னாள் தலைவா் கிறிஸ்டல் ஜான், மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினா் லூயிஸ், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com