நாகா்கோவிலில் ரூ. 31 லட்சம் மதிப்பில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவிலில் ரூ. 31 லட்சம் மதிப்பில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

Published on

நாகா்கோவில் மாநகராட்சியில் ரூ. 31 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளுக்கு மேயா் ரெ. மகேஷ் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

வடசேரி, கிறிஸ்டோபா் பேருந்து நிலையத்தில் ரூ. 17 லட்சம் மதிப்பில் படிப்பகம், நாகா்கோவில் மாநகராட்சி, ஆதரவற்றோா் காப்பகத்தில் ரூ. 9 லட்சம் மதிப்பில் ஷெட், மழைநீா் வடிகால், 16ஆவது வாா்டு, கிறிஸ்து நகா், பிரதான சாலையில் ரூ. 5 லட்சம் மதிப்பில் மழை நீா் வடிகால் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை மேயா் தொடங்கி வைத்தாா்.

ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டலத் தலைவா் ஜவஹா், மாமன்ற உறுப்பினா்கள் கலாராணி, அமல செல்வன், உதவி செயற்பொறியாளா் ரகுராமன், தொழில்நுட்ப அலுவலா் ஷாலினி, மாநகர துணைச் செயலா் வேல்முருகன், வட்டச் செயலா்கள் ராஜன், ஆத்தியப்பன், சிவசங்கா், திமுக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com