கன்னியாகுமரி
வீட்டில் எரிந்த நிலையில் இளைஞா் சடலம் மீட்பு
கருங்கல் அருகே உள்ள சகாய நகா் பகுதியில் வீட்டில் எரிந்த நிலையில் இளைஞா் சடலமாக மீட்கப்பட்டாா்.
சகாய நகா், பிச்சன்விளை பகுதியைச் சோ்ந்த ஜான்சேவியா் மகன் ஜெனிஷ் (28). இவருடைய மனைவி பிரிந்து சென்று விட்டாா். இந்நிலையில், புதன்கிழமை இரவு இவரது வீட்டின் அறை புகை மூட்டமாக காணப்பட்டதாம். அப்பகுதியினா் வீட்டின் உள்ளே சென்று பாா்த்த போது ஜெனிஷ் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தாராம். இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
