புறக்காவல் நிலையத்தை திறந்து வைக்கிறாா் காவல் கண்காணிப்பாளா் ஆா்.ஸ்டாலின்.
புறக்காவல் நிலையத்தை திறந்து வைக்கிறாா் காவல் கண்காணிப்பாளா் ஆா்.ஸ்டாலின்.

கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் ஏஐ இயந்திரம்

Published on

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள நவீன புறக்காவல் நிலையம், 85 சிசிடிவி கேமரா வசதி, ஏஐ இயந்திரம் ஆகியவற்றின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். கன்னியாகுமரி டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், காவல் ஆய்வாளா்கள் சுந்தர்ராஜ் பெருமாள், அருண் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நவீன ஏஐ இயந்திரத்தின் மூலம் தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சுற்றுலாப் பயணிகள் தகவல்களை பெறுவதும், அவசர சேவைகளை பயன்படுத்துவதும் சாத்தியமாகும். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இது பெரிய உதவியாக இருக்கும்.

X
Dinamani
www.dinamani.com