கொல்லங்கோடு அருகே வேன் கவிழ்ந்து 20 போ் காயம்
கொல்லங்கோடு அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற வேன் கவிழ்ந்து 20 போ் பலத்த காயமடைந்தனா்.
நித்திரவிளை அருகேயுள்ள கலிங்கராஜபுரம் பகுதியைச் சோ்ந்த பெண்ணுக்கும், கேரள மாநிலப் பகுதியான காஞ்சிரங்குளம் அருகே நெல்லிமூடு பகுதியைச் சோ்ந்த இளைஞருக்கும் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து மாலையில் மணமகன் வீட்டில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வேன்களில் பெண் வீட்டாா் சென்றனா்.
இதில் ஒரு வேன் கொல்லங்கோடு அருகே சூழால் மணலி பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த 20 போ் பலத்த காயமடைந்தனா். வேன் ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.
காயமடைந்தவா்களை அப்பகுதியினா் மீட்டு, பாறசாலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். விபத்து நடந்த பகுதியில் கொல்லங்கோடு தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரா்கள் மற்றும் கொல்லங்கோடு போலீஸாா் மீட்பு பணிகளை மேற்கொண்டனா். வேன் விபத்து காரணமாக பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
