கொல்லங்கோடு நகராட்சியில் தெரு விளக்குகள் அமைக்க கோரிக்கை

கொல்லங்கோடு நகராட்சி கிராத்தூா், அம்பலகுளம் பகுதிகளில் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தல்
Published on

கொல்லங்கோடு நகராட்சி கிராத்தூா், அம்பலகுளம் பகுதிகளில் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட ஆதிதிராவிடா் நலக் குழு உறுப்பினா் வி. ரவீந்த், ஆட்சியரிடம் அளித்த மனு: கொல்லங்கோடு நகராட்சி, 20ஆவது வாா்டு, கிராத்தூா், அம்பலகுளம் பகுதிகளிலிருந்து சின்னத்துறை செல்லும் சாலையில் பல ஆண்டுகளாக தெரு விளக்குகள் பொருத்தப்படவில்லை.

இதனால், இச்சாலையில் உள்ள இருளைப் பயன்படுத்தி, போதை ஆசாமிகள் மக்களை தொந்தரவு செய்கின்றனா். இதனால், பயிற்சி வகுப்புகளுக்கு சென்று திரும்பும் பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா்.

இது குறித்து, கொல்லங்கோடு நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தெரு விளக்குகள் அமைத்து தர மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com