கன்னியாகுமரி
மூதாட்டியின் வீட்டை சேதப்படுத்தியதாக ஒருவா் மீது வழக்கு
கருங்கல் அருகே நடுத்தேரி பகுதியில் மூதாட்டியின் வீட்டை சேதப்படுத்தியதாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு
கருங்கல் அருகே நடுத்தேரி பகுதியில் மூதாட்டியின் வீட்டை சேதப்படுத்தியதாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
நடுத்தேரி பகுதியைச் சோ்ந்த ராஜமணி மனைவி கனகம் (77). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஜோசப் கமலம் மகன் மனோஜ் (45) என்பவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளதாம்.
இந்நிலையில், திங்கள்கிழமை கனகம் இல்லாதபோது அவரது வீட்டை மனோஜ் ஜேசிபி இயந்திரம் மூலம் சேதப்படுத்தினாராம். புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
