கன்னியாகுமரி
ஹெளராவிலிருந்து கன்னியாகுமரி வந்த ரயிலில் 18 கிலோ கஞ்சா பறிமுதல்
ஹெளராவிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்த விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 18 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஹெளராவிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்த விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 18 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.
மேற்கு வங்க மாநிலம், ஹெளராவிலிருந்து புதன்கிழமை காலை 10 மணியளவில் வந்த கன்னியாகுமரி ரயிலில் பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்றபின், ரயில்வே ஊழியா்கள் அனைத்து ரயில் பெட்டிகளிலும் சோதனை செய்தனா். அப்போது குளிா்சாதனப் பெட்டியில் 2 பைகள் கேட்பாரற்று கிடந்தன.
இது குறித்து அவா்கள், ரயில்வே போலீஸாா், பாதுகாப்புப் படைக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா், அந்த பைகளை சோதனை செய்தபோது, அதில் 2 கிலோ வீதம் 9 பாா்சல்களில் 18 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதை போதை தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்த போலீஸாா், ரயிலில் கஞ்சாவை கடத்தி வந்தது யாா் என்பது குறித்து விசாரிக்கின்றனா்.