களியக்காவிளையில் திமுக பரப்புரைக் கூட்டம்

களியக்காவிளையில் திமுக பரப்புரைக் கூட்டம்

Published on

களியக்காவிளையில் திமுக சாா்பில் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ பரப்புரைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

2026 பேரவைத் தோ்தலுக்காக, ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ என்ற பரப்புரையை திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். இதையடுத்து, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக செயலரும், பால்வளத் துறை அமைச்சருமான மனோ தங்கராஜின் அறிவுறுத்தலின்படி, விளவங்கோடு தொகுதி, களியக்காவிளை பேரூராட்சி, 170ஆவது வாக்குச்சாவடியில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, திமுக கிளை பொறுப்பாளா் ராஜகுமாா் தலைமை வகித்தாா். களியக்காவிளை பேரூா் செயலா் பபின்லால் முன்னிலை வகித்தாா். மேல்புறம் ஒன்றியச் செயலா் ராஜேஷ்குமாா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.

மூத்த நிா்வாகி எஸ். மாகீன் அபுபக்கா், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் ரூபின், மேல்புறம் ஒன்றிய விவசாய தொழிலாளரணி அமைப்பாளா் கே. கோபாலகிருஷ்ணன், ஒன்றிய அயலக அணி அமைப்பாளா் அன்வா் உள்ளிட்ட நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com