கன்னியாகுமரி
சிறுமிக்கு பாலியல் தொல்லை: எலக்ட்ரிஷீயன் கைது
கருங்கல் அருகே உள்ள மாங்கரை பகுதியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எலக்ட்ரிஷீயனை போலீஸாா் கைது செய்தனா்.
மாங்கரை, இடையன் கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ் (57). எலக்ட்ரிஷீயன். இவரது மனைவி வீட்டில் மாணவா்களுக்கு பயிற்சி வகுப்பு (டியூசன்) நடத்தி வருகிறாா். இந்நிலையில் புதன்கிழமை, அந்த பகுதியில் உள்ள 8 வயது சிறுமி பயிற்சி வகுப்பு முடிந்து கிளம்பினாராம். அப்போது பால்ராஜ், அச்சிறுமியை வீட்டிற்கு கொண்டு சென்றுவிடுவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இது குறித்த புகாரின் பேரில் குளச்சல் மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து பால்ராஜை கைது செய்தனா்.
