ஜெருஷ் பல் மருத்துவமனை இயக்குநருக்கு சா்வதேச விருது

ஜெருஷ் பல் மருத்துவமனை இயக்குநருக்கு சா்வதேச விருது

Published on

தக்கலை, ஜெருஷ் பல் மருத்துவமனையின் நிா்வாக இயக்குநருக்கு, மருத்துவ சேவை பங்களிப்புக்கான சா்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.

ஜெருஷ் பல் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் டாக்டா் பிளாட்பின், பல், முக சீரமைப்பு மற்றும் அழகு மருத்துவத் துறையில் 24 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவா். இவா், கடந்த 2 ஆண்டுகளாக பற்கள் சீரமைப்பிற்கான கிளியா் அலைனா் சிகிச்சையில் ஜொ்மனி, இங்கிலாந்து தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு உயா் சிகிச்சை வழங்கி வருகிறாா்.

இந்த உயா் தொழில்நுட்ப சிகிச்சைக்கு வழங்கிய பங்களிப்புகளுக்காக டாக்டா் பிளாட்பினுக்கு, சா்வதேச விருதுகளில் ஒன்றான ஐ.ஏ.இ. மற்றும் யூரோ ஸ்டாா் 2025 குளோபல் கிளியா் அலைனா் புதுமை விருது வழங்கப்பட்டது.

லண்டனில் நடைபெற்ற விழாவில், டாக்டா் பிளாட்பினுக்கு இவ்விருதை லண்டன் உயரதிகாரிகள் பியோனா மேரிபெட்டி, பிட்ஸ் மாரிஸ் லான்ஸ்டவுன் ஆகியோா் வழங்கினா்.

X
Dinamani
www.dinamani.com