மதுபோதையில் சிற்றுந்து இயக்கிய ஓட்டுநருக்கு அபராதம்

Published on

நாகா்கோவிலில் மதுபோதையில் சிற்றுந்து இயக்கிய ஓட்டுநருக்கு ரூ. 17 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

நாகா்கோவில் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு காவல் ஆய்வாளா் வில்லியம்பெஞ்சமின் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை செட்டிக்குளம் சந்திப்பு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த சிற்றுந்தை நிறுத்தி சோதனை செய்ததில், ஓட்டுநா் கொடுப்பைக்குழி பகுதியைச் சோ்ந்த ஜெபா்சன் (48) மதுபோதையில் வாகனத்தை ஓட்டியது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா் சிற்றுந்தை பறிமுதல் செய்தனா். மேலும், ஓட்டுநா் ஜெபா்சனுக்கு ரூ. 17ஆயிரம், இதற்குப் பொறுப்பான நடத்துநருக்கு ரூ. 10ஆயிரத்து 500 என மொத்தம் ரூ. 27 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com