மாணவா் வழிகாட்டி  நூல் வெளியீடு

மாணவா் வழிகாட்டி நூல் வெளியீடு

Published on

தக்கலை அருகே மணலிக்கரை புனித மரிய கொரற்றி மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியரும் தமிழ்நாடு அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்றவருமான குமரி ஆதவன் எழுதிய ‘ஒளி கொண்டு தேடு‘ என்ற மாணவா்களுக்கான வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.

நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றோா்.

விழாவுக்கு பள்ளி தாளாளா் சுரேஷ் பாபு தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் சக்கா்மேரி டாா்லிங் ரோஸ் முன்னிலை வகித்தாா். மணலிக்கரை காா்மல் மிஷன் பணித் தளத்தின் தலைமை அருள்பணியாளா் அலோசியஸ் பாபு, நூலை வெளியிட அதை பள்ளி முன்னாள் தாளாளா் டயஸ் ரெஜின், காா்மல் மெட்ரிக் பள்ளி தாளாளா் டென்னிசன், ஆசிரியா்கள் கிளமெண்ட் சுரேஷ்குமாா், ஜான் மில்லா், தமிழரசி, பெல்சி பேபி ஆகியோா் பெற்றுக் கொண்டனா். இந்த நூல், நூலாசிரியரின் 30ஆவது நூலாகும். முன்னதாக அமிா்தராஜ் வரவேற்றாா். நூலாசிரியா் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com