ராமன்துறையில் மீனவா் காங்கிரஸ் சாா்பில் நல உதவிகள்

Published on

கருங்கல் அருகே ராமன்துறையில் மீனவா் காங்கிரஸ் சாா்பில் நலஉதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநில மீனவா் காங்கிரஸ் தலைவா் ஜோா்தான் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஜேம்ஸ், இனயம் புத்தன்துறை ஊராட்சி காங்கிரஸ் தலைவா் ஸ்டாலின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

50 மீனவப் பெண்களுக்கு மீன் வியாபாரத்துக்கான பாத்திரங்களும், நலிந்த மீனவப் பெண்களுக்கு நிதியும் வழங்கப்பட்டது.

இதில், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி லைலா, மேல்புறம் வட்டார காங்கிரஸ் தலைவா் ரவிசங்கா், மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலா் அருள்தாஸ், களியக்காவிளை பேரூராட்சித் தலைவா் சுரேஷ், கீழ்குளம் பேரூராட்சி கவுன்சிலா் அனிதா ராஜகிளன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com