கிள்ளியூா் தெற்கு ஒன்றியத்தில் திமுகவினா் பிரசாரம்

கிள்ளியூா் தெற்கு ஒன்றியப் பகுதிகளில் திமுகவினா் வீடு, வீடாக சென்று ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குசாவடி என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டனா்.
Published on

கிள்ளியூா் தெற்கு ஒன்றியப் பகுதிகளில் திமுகவினா் வீடு, வீடாக சென்று ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குசாவடி என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டனா்.

கீழ்குளம் பேரூராட்சிக்குள்பட்ட கீழ்குளம், செந்தறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்றுவாக்கு உரிமைகள் குறித்தும், திமுக அரசின் சாதனைகளை விளக்கியும் பிரசாரத்தில் ஈடுபட்டனா். இந்த நிகழ்ச்சிக்கு, கிள்ளியூா் தெற்கு ஒன்றிய திமுக செயலா் கோபால் தலைமை வகித்தாா். ஒன்றிய அவைத்தலைவா் தேவா முன்னிலை வகித்தாா்.

இதில், தகவல் தொழில்நுட்ப அணி கிள்ளியூா் ஒன்றிய துணை அமைப்பாளா்அபிலாஷ்,மேரி,கிறிஸ்டல் பபி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com