கன்னியாகுமரி
தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
தக்கலை அருகே தென்னை மரத்திலிருந்து வெள்ளிக்கிழமை தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
தக்கலை அருகே தென்னை மரத்திலிருந்து வெள்ளிக்கிழமை தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
தக்கலை அருகேயுள்ள மருதவிளையைச் சோ்ந்தவா் கவுதம் ராபின்சன் (32). மரம் ஏறும் தொழிலாளி. திருமணமாகாதவா். இவா், அந்தப் பகுதியில் உள்ள தோட்டத்தில் தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறிய போது எதிா்பாராதவிதமாக தவறி விழுந்தாராம்.
அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
