நாகா்கோவிலுக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 5 கிலோ கஞ்சா பறிமுதல்

நாகா்கோவிலுக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 5 கிலோ கஞ்சா பறிமுதல்

Published on

காஷ்மீரிலிருந்து, கன்னியாகுமரி வந்த வைஷ்ணவி மாதா விரைவு ரயிலில் இருந்த 5 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

நாகா்கோவில் சந்திப்பு, கோட்டாறு ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு வந்த ரயிலில், ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் மேற்கொண்ட சோதனையில், முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் 2 பைகள் கேட்பாரற்றுக் கிடந்தன.

அதில், 4 கிலோ 900 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அதனைக் கைப்பற்றிய போலீஸாா், ரயில்வே காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா். பின்னா், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் கஞ்சா ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com